வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாட்டால் மனமுடைந்த காதலன்: காதலியுடன் ரெயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை..!

வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாட்டால் மனமுடைந்த காதலன்: காதலியுடன் ரெயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை..!


boyfriend-committed-suicide-by-jumping-in-front-of-the

உத்தரபிரதேசம், இட்டா வாஹ் மாவட்டம் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் விமல் குமார் (25 ). அதேபகுதியை சேர்ந்த இளம்பெண் மான்சி (22). இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே, விமல் குமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருமணத்தில் விமல் குமாருக்கு விருப்பம் இல்லாத்தால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை விமல் குமார் தனது வீட்டைவிட்டு வெளியேறி உள்ளார். பின்னர் அவரது காதலி மான்சியை சந்தித்து அவரையும் அழத்துக்கொண்டு, ராம்நகர் பகுதியில் உள்ள ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். இருவரும் ஏற்கனவே திட்டமிட்டபடி, அங்கு வேகமாக வந்த ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன்பு பாய்ந்துள்ளனர். எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்த காதல் ஜோடிகள் விமல் குமார்-மான்சி தூக்கி வீசப்பட்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விமல் குமார்-மான்சி வீட்டில் இல்லாததை அறிந்த அவர்களது குடும்பத்தினர் இருவரையும் தேடியுள்ளனர். அப்போது, ராம்நகர் பகுதியில் தண்டவாளம் அருகே காதல் ஜோடிகள் ரெயிலில் குத்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் அறிந்து அங்கே சென்ற அவர்கள் காதலர்களின் சடங்களை பார்த்து கதறி அழுத சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் மனமுடைந்த வாலிபர் தனது காதலியுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.