காதலியின் வீட்டில் சடலமாக கிடந்த காதலன்..! திடுகிடும் சம்பவம்.!boy suicide in Uttar Pradesh at his lover home

த்திரபிரதேசத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அவரது காதலியின் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்பால் என்னும் வாலிபர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த விவரம் அறிந்த பெண்ணின் தந்தை இது குறித்து பஞ்சாயத்து கூட்டம் கூட்டி பேசியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் அன்று இரவு சந்தித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதை அறிந்த பெண்ணின் தந்தை இருவரையும் தாக்கியிருக்கிறார். 

Uttar pradesh

இந்த நிலையில் இக்பால் தன் காதலித்த பெண்ணின் வீட்டில் சடலமாக தூக்கில் தொங்கிக் கொண்டிருந்துள்ளார். இதனை அறிந்த இக்பாலின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். 

விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.