பிறப்புறுப்பு சிதைத்து, கண்ணை தோண்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்.! உலகையே உலுக்கிய சம்பவத்திற்கு அதிரடி தீர்ப்பு!!!

பிறப்புறுப்பு சிதைத்து, கண்ணை தோண்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்.! உலகையே உலுக்கிய சம்பவத்திற்கு அதிரடி தீர்ப்பு!!!


boy-honorkilled-by-lover-family

கேரள மாநிலம் கோட்டயத்தில் வசித்து வருபவர் கெவின் ஜோசப். இவர் தனது கல்லூரியில் படித்த நீனு என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார் . இவர்களது காதல் விவகாரம் அவர்களது பெற்றோர்களுக்கு தெரியவந்த நிலையில், இருவரும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நீனுவின் வீட்டில் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கெவின் நீனுவை  கடந்த ஆண்டு மே மாதம் கோட்டயத்தில் உள்ள ஒரு துணை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்துக்கொண்டனர். 

இதனால் ஆத்திரமடைந்த நீனுவின் குடும்பத்தினர் கெவின் வீட்டை கடுமையாக அடித்து உடைத்து, கெவினையும், அவனது நண்பன் அனீஷையும் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். அப்பொழுது அவரது நண்பன் அனீஷை கடுமையாக தாக்கி பாதி வழியில் இறக்கிவிட்டுள்ளனர் . பின்னர் மறுநாள் கெவின்  கொல்லம் ஓடையில் பலமாக பிறப்புறுப்பை சிதைத்தும் ஒரு கண்ணை நோண்டி எடுத்தும் கொடூரமாக கொலைசெய்யப்பட்டு  பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

Murder

அதனை தொடர்ந்து கெவின் குடும்பத்தார்கள் புகார் அளித்ததை தொடந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு 14 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து தற்போது 4 பேர் விடுவிக்கப்பட்டு 10 குற்றவாளிகளுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்வு அளிக்கப்பட்டது.

மேலும் ஒவ்வொரு குற்றவாளிக்கும் ரூ .40,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் இருந்து தலா ரூ .1.5 லட்சம் நீனு மற்றும் கெவின் தந்தை ஜோசப் ஆகியோருக்கும், கெவின் நண்பர் அனீஷுக்கு ரூ .1 லட்சம் வழங்கவும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.