அதிவேக பயணம்..‌ சருக்கி விழுந்து மின் கம்பத்தில் மோதி பரிதாபம்..!

அதிவேக பயணம்..‌ சருக்கி விழுந்து மின் கம்பத்தில் மோதி பரிதாபம்..!


boy-dead-by-road-accident

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர், நிலை தடுமாறி கீழே விழுந்து, மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் வசித்து வந்தவர் சஞ்சீவன். இவர் தனது இருசக்கர வாகனத்தில் புனலூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி, அதிவேகமாக சென்று கொண்டு இருந்தார். அப்போது சுடுகாடா என்னும் ஒரு பகுதியில் சாலையின் வளைவில் திரும்பும் போது, திடீரென இவரது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. 

இதில் அவரது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறியதில், கீழே விழுந்த இளைஞர் சாலை ஓரத்தில் அமைந்திருந்த மின்கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

KERALA

பின் இதனை கண்ட அருகிலிருந்தவர்கள் இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சஞ்சீவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சஞ்சீவன் வேகமாக வந்து வளைவில் திரும்பியதில், நிலைதடுமாறி கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவத்தின் காட்சிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வெளியாகியுள்ளன பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.