தண்ணீருக்கு பதில் சானிடைசரை குடித்த கமிஷனர்.! வெளியான பகீர் வீடியோ காட்சி.!

தண்ணீருக்கு பதில் சானிடைசரை குடித்த கமிஷனர்.! வெளியான பகீர் வீடியோ காட்சி.!



BMC Joint Municipal Commissioner Ramesh Pawar accidentally drinks from a bottle of hand sanitiser

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. 

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கைகளை சுத்தப்படுத்த கிருமி நாசினி சானிடைசர் பயன்படுத்த ஆரம்பத்தில் இருந்தே அறிவுறுத்தப்பட்டது. இதனால் பலரும் கிருமி நாசினி சானிடைசர் பயன்படுத்தி வருகின்றனர்.

சானிடைசர் பல நிறங்களில் உள்ளது. சில சானிடைசர் தண்ணீர் போன்றே இருப்பதால் சில இடங்களில் தண்ணீருக்குப் பதிலாக சானிடைசரை குடிக்கக்கூடிய கவனக்குறைபாடு சம்பவம் நடைபெற்று விடுகிறது.


அந்த வகையில், மும்பை மாநகராட்சியின் இணை ஆணையர் ரமேஷ் பவார், மாநகராட்சியில் பட்ஜெட் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, தண்ணீர் என நினைத்து சானிடைசரை அவர் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவரை சுற்றியிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கு ஒரே மாதிரியான தண்ணீர் பாட்டில்களும், சானிடைசரும் இருந்ததால் இதுபோன்று நடந்துவிட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் அதைக் குடித்தவுடன் தவறை உணர்ந்துவிட்டேன். எனவே அதனை ஒரேயடியாக விழுங்கவில்லை எனக் கூறியுள்ளார். அதிகாரியின் கவனக்குறைவால் ஏற்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.