இந்தியா மருத்துவம்

ஒரு மனுஷன் வாய்க்குள்ள இவ்வளவு பற்களா இருக்கும்!! சிறுவனின் பற்கள் எண்ணிக்கையை பார்த்து மிரண்டுபோன மருத்துவர்கள்.

Summary:

சிறுவன் ஒருவரின் வாயில் இருந்த அதிகப்படியான பற்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற

சிறுவன் ஒருவரின் வாயில் இருந்த அதிகப்படியான பற்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர்.

பீகாரை சேர்ந்த நிதிஷ் குமார் என்ற 17 வயது சிறுவன் ஒருவரின் வாயில் சுமார் 82 பற்கள் முளைத்துள்ளது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக கடும் அவதிக்கு உள்ளாகிவந்துள்ளான் சிறுவன். ஒருகட்டத்தில் அதிகப்படியானா பற்களால் சிறுவனின் முக தோற்றமே மாற தொடங்கியுள்ளது.

இந்நிலையில்தான் பீகாரில் உள்ள இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சைன்ஸ் மருத்துவர்களை சிறுவன் சந்தித்துள்ளான். உடனே சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவர்கள், சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து, சிறுவனின் வாயில் இருந்து தேவை இல்லாத பற்களை அகற்றியுள்ளனர்.


Advertisement