பள்ளி மாணவர்களின் மதிய உணவில் இறந்துகிடந்த பச்சோந்தி; 50 பேர் வாந்தி-மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதி.!

பள்ளி மாணவர்களின் மதிய உணவில் இறந்துகிடந்த பச்சோந்தி; 50 பேர் வாந்தி-மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதி.!


Bihar Students Food Poison 

 

பீகார் மாநிலத்தில் உள்ள சிதமார்ஹி மாவட்டம், தூம்ரா நகரில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில், நேற்று மாணவர்கள் சாப்பிட மதியம் உணவு வழங்கப்பட்டுள்ளது.

அவ்வுணவில் பச்சோந்தி சமைக்கும் போது விழுந்து இறந்ததாக தெரியவரும் நிலையில், அது தெரியாமல் உணவு பரிமாறப்பட்டு இருக்கிறது. மாணவர்களும் அதனை சாப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், உணவு சாப்பிட்ட 50 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உட்பட உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து, விரைந்து அவர்களை அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்ற மாணவர்கள் அனைவரும் உடல்நலம் தேறினர். 

விசாரணையில், மதியம் வழங்கப்பட்ட உணவில் பச்சோந்தி இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இதனால் உணவு விஷத்தன்மையாக மாறி மாணாக்கர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது அம்பலமானது.