கதறிய அழுத அரசி புயலாக மாறிய தருணம்! கழுத்திற்கு வந்த கத்தி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமொ வீடியோ.....
நடனப்பெண்களுடன் ஆட்டம் போட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ...சர்ச்சையை கிளப்பிய வீடியோ.!

ஆளும்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் நடன பெண்களுடன் இணைந்து நடனமாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியினைச் சேர்ந்த எம்.எல்.ஏ கோபால் மண்டல். இவர் தனது தொகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.அப்போது நடன நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், திடீரென மேடை ஏறி நடனமாடிய பெண்களுடன் உற்சாக மிகுதியில் கைகளைப் பற்றியபடி ஆடியுள்ளார்.
இதனை அங்குள்ளவர்கள் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவிட்டு நிலையில், தற்போது அந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.