பாக்கவே பாவமா இருக்கு... 200 கிலோ எடையுடன் போராடும் இளையன்! இந்த பிரச்சனையால் ஒருநாளைக்கு 3கி அரிசி, 4லி பால், 100 ரொட்டிகள், 5கி இறைச்சி! வேதனையின் உச்சம்...



bihar-man-eats-100-rotis-daily

உலகில் பல்வேறு வகையான உணவு சாதனைகள் முன்னிறுப்பதை நாம் பார்த்துள்ளோம். ஆனால் பீகாரைச் சேர்ந்த ஒருவரின் உணவுப் பழக்கம் இன்று அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பொதுவாக ஒரு குடும்பம் தினசரி உண்பதைவிட அதிகமாக உணவுகளை உட்கொள்ளும் இவர் குறித்து சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

பீகார் மாநிலத்தின் கதிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரஃபிக் அட்னான் (வயது 35), தனது வித்தியாசமான உணவுப் பழக்கத்தால் செய்திகளில் இடம் பிடித்துள்ளார். தினமும் 3 கிலோ அரிசி, 4 லிட்டர் பால், 80 முதல் 100 ரொட்டிகள், 2 கிலோ கோழி அல்லது ஆட்டிறைச்சி மற்றும் 2 கிலோ மீன் வரை அவர் உண்கிறார். இவ்வளவு உணவு உட்கொள்ளும் காரணமாக, அவர் தற்போது சுமார் 200 கிலோ எடையுடன் உள்ளார்."புலிமியா நெர்வோசா" எனும் ஒரு உணவுக் கோளாறு அவரை சிறுவயதிலிருந்தே பாதித்து வருகிறது.

அதிக உணவை உட்கொள்ளும் இந்த நிலை அவரது உடல் எடையை கட்டுப்பாடின்றி அதிகரிக்கச் செய்துள்ளது. அதிக எடை காரணமாக நடக்கவும் சிரமம் ஏற்பட்டுள்ளதோடு, உடல் நலம், திருமண வாழ்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. “திருமணமாகிய பின் கூட குழந்தை பெற முடியவில்லை. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தால் சீராகும் எனக் கூறினார்கள். ஆனால் மருந்துகள் எடுத்தபோதும் எதுவும் நன்றாகவில்லை,” என அவர் கூறுகிறார்.

இதையும் படிங்க: இப்படி கூட நடக்குமா! நம்பவே முடியல... 20 ஆண்டுகளாக காது கேட்காமல் இருந்த பெண்! பல் சிகிச்சைக்கு பிறகு நடந்த அதிசயம்! வியக்க வைக்கும் சம்பவம்...

அதிக எடையால் வழக்கமான மோட்டார் சைக்கிள்கள் தாங்க முடியாத நிலையில் இருப்பதால், புல்லட் மோட்டார் சைக்கிளை மட்டுமே பயன்படுத்த முடிகிறது என்றும் அவர் கூறுகிறார். மேலும், தனது உடலை பார்த்து சமூகத்தில் சிலர் ஏளனம் செய்கிறார்கள் என்றும் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.இந்த உணவுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட ரஃபீக், சிறந்த மருத்துவ உதவியால் மீண்டும் ஒரு சாதாரண வாழ்கையை நடத்த முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். உணவுப் பழக்கங்கள் உடல் நலனில் எவ்வளவு முக்கிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை அவரின் வாழ்க்கை எடுத்துக்காட்டாக விளக்குகிறது.

இதையும் படிங்க: சமையல்காரராக இருந்து மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் திறமைசாலி! எப்படின்னு தெரியுமா?