மாநிலமே பேரதிர்ச்சி.. முதல்வரை பாய்ந்து அடித்த இளைஞன்.. பகீர் வீடியோ வைரல்.! அதிரடி உத்தரவிட்ட முதல்வர்.!

மாநிலமே பேரதிர்ச்சி.. முதல்வரை பாய்ந்து அடித்த இளைஞன்.. பகீர் வீடியோ வைரல்.! அதிரடி உத்தரவிட்ட முதல்வர்.!


Bihar CM Nithish Kumar Attacked by Youngster Video Goes Viral

பாதுகாவலர்கள் முன்னிலையில் இளைஞன் முதல்வரை பாய்ந்து அடுத்த பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று பக்தியார்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது, அங்கிருந்த தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திக்கொண்டு இருந்தார். 

அவருக்கு பாதுகாப்பாக அதிகாரிகள் இருந்த நிலையில், சில கட்சியினரும் உடன் இருந்தனர். அந்த சமயத்தில், அதிகாரிகள் போல இருந்த இளைஞர் ஒருவர், திடீரென நிதிஷ் குமார் இருக்கும் மேடையில் ஏறி அவரை தாக்கியுள்ளார். இதனால் அதிர்ந்துபோன அதிகாரிகள், இளைஞரை சுற்றிவளைத்து மடக்கிப்பிடித்தனர். 

பின்னர் அவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்த நிலையில், முதல்வர் தன்னை அடித்த சிறுவனின் மீது வழக்குப்பதிவு ஏதும் செய்ய வேண்டாம். அவரின் பிரச்சனை குறித்து கேட்டறிந்து, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.