பள்ளியிலே இப்படி ஒரு காட்சியா? வெள்ளரிக்காய் VS காண்டம் பயன்படுத்தி பாலியல் பாடதிட்டத்தை கற்பித்த உயிரியல் ஆசிரியர்! 2 கோடி பார்வைகளைக் கடந்த வைரலாகும் வீடியோ...!!!



bihar-biology-teacher-condom-cucumber-demo-viral-video-

பீகாரைச் சேர்ந்த உயிரியல் ஆசிரியர் சந்தன் குமார் பண்டிட், மாணவர்களுக்கு பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து வகுப்பறையில் செயல்முறை விளக்கம் அளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வெள்ளரிக்காய் மற்றும் காண்டமை பயன்படுத்தி அவர் அளித்த விளக்கம் தற்போது இணையவாசிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை “இந்தியாவின் வைரல் பயாலஜி சர்” எனக் குறிப்பிடும் சந்தன் குமார் பண்டிட், இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள தலைப்புகளை மாணவர்கள் தயக்கமின்றிப் புரிந்துகொள்ளும் வகையில் கற்பிப்பதே தனது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உன்ன மாறி ஆளையெல்லாம் சும்மா விடக்கூடாதுடா..! ரயில் நிலையத்தில் பெண்ணை பார்த்து அந்தரங்க உறுப்பை பிடித்து ஆபாசச் சைகை செய்த வாலிபர்! இறுதியில் பெண் கொடுத்த தரமான பதிலடி....!!!

பாலியல் நோய்கள், திட்டமிடப்படாத கர்ப்பம் குறித்து விளக்கம்

பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களைத் தடுப்பது மற்றும் திட்டமிடப்படாத கர்ப்பத்தைத் தவிர்ப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தச் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டதாக ஆசிரியர் கூறியுள்ளார். புத்தகத்தில் மட்டும் படிப்பதைவிட, பாடத்துடன் தொடர்புடைய விஷயங்களை எளிய முறையில் விளக்கினால் மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 கோடிக்கும் அதிகமான பார்வைகள்

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து வைரல் வீடியோ குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.

https://www.instagram.com/reel/Ddj1cS3yJCh/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==

சில இணையவாசிகள், மாணவர்களுக்கு முக்கியமான சுகாதார விழிப்புணர்வை நேரடியாகப் புரியவைத்த ஆசிரியரின் முயற்சியை வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில், வகுப்பறையில் இதுபோன்ற செயல்முறை விளக்கங்கள் தேவையில்லை என்றும், ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு தனித்தனியாக இதுபோன்ற பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் பாலியல் ஆரோக்கிய கல்வி தொடர்பான கற்பித்தல் முறைகள் குறித்த விவாதமும் தீவிரமடைந்துள்ளது.

 

இதையும் படிங்க: இதுதாண்டா சரியான நேரம்..! தனிமையில் இருந்த காதல் ஜோடி.! காதலியை குண்டுகட்டாக தூக்கி அந்தரங்கப் பகுதிகளைத் தொட்டு... அராஜகம் செய்த ரவுடி கும்பல்..! அதிர்ச்சி வீடியோ...!!!!