இந்தியா பிக்பாஸ்

சாண்டியை சீண்டிய வனிதா! உச்சகட்ட பதற்றத்தில் பிக்பாஸ் இல்லம். மூன்றாவது ப்ரோமோ வீடியோ.

Summary:

Bigg boss season 3 day 51 3rd promo

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 50 நாட்கள் இதுவரை முடிந்துள்ள நிலையில் 51 வது நாளுக்கான மூன்று ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. அதில் முதல் ப்ரோமோவில் முகின் பற்றி அபிராமியிடம் தான் வெளியில் முகின் பற்றி கேள்விப்பட்டதை ஒவொன்றாக கூறுகிறார் வனிதா.

இரண்டாவது ப்ரோமோவில் முகின் - அபிராமி இடையேயான சண்டை முற்றி ஒருகட்டத்தில் நாற்காலியை எடுத்து அபிராமியை தாக்க முயற்சிக்கிறார் முகின். இந்நிலையில் சற்றுமுன் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

மூன்றாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் முகினை சமாதானம் செய்ய முயற்சிக்கின்றனர். அப்போது முகினிடம் வனிதா பேச முயற்சிக்க அங்கிருந்த சாண்டி இவை அனைத்தும் உன்னால்தான் என்பதுபோல வனிதாவை திட்டுகிறார். இதோ அந்த வீடியோ. 


Advertisement