இந்தியா பிக்பாஸ்

வெளியே போகணும். நீலிக்கண்ணீர் வடித்த லாஸ்லியா. கண்டித்து உள்ளே அனுப்பிய பிக்பாஸ். என்ன கூறினார் தெரியுமா?

Summary:

Bigg boss lasliya crying scene

பிக்பாஸ் சீசன் மூன்று இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 6 பேர் மட்டுமே மீதம் உள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் கோல்டன் டிக்கெட்டை வென்று முகேன் இறுதி வாரத்திற்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார். முகெனை தவிர மற்ற போட்டியாளர்களில் யார் கடைசி வரை செல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று சேரன், லாஷ்லியா இருவரும் வெளியேற்றப்படுவதுபோல் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதில், சேரன் மட்டும் வெளியேற வேண்டும் எனவும், லாஷ்லியா மீண்டும் வீட்டிற்குள் செல்லலாம் என பிக்பாஸ் கூறியபோது நான் வெளியேறுகிறேன் பிக்பாஸ் சேரன் உள்ளே இருக்கட்டும் என கூறி அழுதார்.

அதற்கு கண்டிப்புடன் பதில் கூறிய பிக்பாஸ் நீங்கள் நினைப்பதுபோலம் வெளியேற முடியாது, வீட்டிற்குள் செல்லுங்கள். அதன் பின்பு நீங்க சிரிங்க லொஸ்லியா, சிரிக்குறத பார்க்க சந்தோஷமா இருக்கு, ஆடிப்பாடுற லொஸ்லியாவா மாறுங்க என ஆறுதல் கூறி உள்ளே அனுப்பியுள்ளார்.


Advertisement