மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
மணமேடையில்.. தாய் செய்த காரியம்.. பதறிப்போன மணமகன்.. இறுதியில் உறுதியான முடிவு.!

தலைக்கு ஏறிய போதை
சமூக வலைதளங்களில் அடிக்கடி பல்வேறு விதமான சர்ச்சை வீடியோக்கள் வைரலாகி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தக்கூடும். அந்த வகையில், தற்போது வெளியாகியிருக்கும் ஒரு வீடியோவில் மணப்பெண்ணின் தாய் மணமேடையில் வைத்து, தன் மகளின் திருமணத்தை நிறுத்த சொல்லி கதறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த திருமண வரவேற்பில் மணமகன் குடித்துவிட்டு அதிகப்படியான மது போதையில் இருந்து வந்துள்ளார்.
தவித்துப் போன தாய்
அவரது சேட்டைகள் உறவினர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமண நாளில் கூட மது இல்லாமல் இருக்க முடியாத மணமகனின் அந்த நிலையை பார்த்த பெண்ணின் தாய் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, தன் மகளின் வாழ்க்கையை நினைத்து கவலை அடைந்துள்ளார். 'மேடைவரை வந்து விட்டதே!' என்று திருமணம் செய்து வைக்காமல் அந்தப் பெண்ணின் எதிர்காலத்தை நினைத்துப் பார்த்த தாய் திருமணத்தை நிறுத்த எண்ணியுள்ளார்.
இதையும் படிங்க: ஆன்லைன் காதல்.. நேரில் வந்த காதலி.. நிகழ்ந்த சம்பவத்தில்.. இறந்த காதலன்.!
நிறுத்தப்பட்ட திருமணம்
அங்கு இருந்த நபர்களிடம் கையெடுத்து வணங்கிய அவர் தயவுசெய்து அனைவரும் திருமணத்தை நிறுத்திவிட்டு இங்கிருந்து கிளம்பி செல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். அவரை சுற்றி இருந்தவர்கள் சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால், அந்த தாய் தனது முடிவில் மிக உறுதியாக இருந்தார். இது பற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
தைரியமான முடிவு
நமது இந்தியாவில், இது போன்ற திருமண விஷயங்களை பொருத்தவரை தனிப்பட்ட வாழ்க்கையை விட பொது சமூகம் என்ன நினைக்கும் என்பதை பற்றிய கருத்துக்கள் தான் பெரியதாக இருக்கும் தன்னுடைய மன நிம்மதியை விட அவர்கள் மற்றவர்களின் எண்ணங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் இந்த தாய் அப்படி ஒரு முடிவு எடுக்காமல், தைரியமாகவும் தெளிவாகவும் தனது மகளுக்காக எடுத்த இந்த முடிவு பெரிதும் பாராட்டப்படுகிறது.
இதையும் படிங்க: போதையில் அடவாடி செய்த மாப்பிள்ளை தோழர்கள்.. திருமணத்தை நிறுத்தி ஷாக் கொடுத்த மாமியார்.!