கொரோனோவால் வேலை இழந்த கூலி தொழிலாளி ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய அதிசயம்.! வைரல் சம்பவம்.!

கொரோனோவால் வேலை இழந்த கூலி தொழிலாளி ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய அதிசயம்.! வைரல் சம்பவம்.!



Bengali carpenter became millionaire through lottery

கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவால் பலர் வேலையிழந்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில், கார்பென்டராக வேலைபார்த்துவந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த லெஜருள் என்பவர் ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறியுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான லெஜருள் என்பவர் கேரளாவில் கார்பென்டராக வேலை பார்த்துவந்துள்ளார். கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால் பலர் வேலையிழந்து வரும் நிலையில், இவரின் வேலையும் பாதிக்கப்பட்ட, என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிய லெஜருள், இறுதியில் சொந்த ஊருக்கே திரும்பச் சென்றுவிடலாம் என்று எண்ணி, ரயில் ஏறி மேற்கு வங்கம் சென்றடைந்துள்ளார்.

Mysteries

இந்நிலையில், கேரளாவில் இருந்தபோது லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார் லெஜருள். இவர் சொந்த ஊருக்கு சென்ற நேரம் பார்த்து லெஜருள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. கொரோனாவால் இனி எப்படி வாழப்போகிறோம் என தடுமாறிய லெஜருள் ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறியுள்ளார்.

இதுபற்றி கூறிய அவர், இந்த முழு பணத்தையும் தனது பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு பயன்படுத்தப்போவதாகவும், என் மகன் கார்பெண்டர் வேலை பார்க்க மாட்டான், ஏனெனில் தற்போது அவன் கோடிஸ்வரன் என கூறியுள்ளார் லெஜருள்.