இந்தியா லைப் ஸ்டைல்

யார் இடத்தில வந்து யார்கிட்ட சீன் போடுற..! புலியை ஓட ஓட விரட்டிய கரடி..! வைரல் வீடியோ..!

Summary:

Bear fled the tiger in Rajasthan zoo

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் நகரத்தின் அருகே உள்ள ரந்தம்பூர் தேசியப் பூங்காவில் புலிகள், சிறுத்தைகள், மான்கள் அதிகமாக வாழ்கின்றன. இந்த பூங்காவில் எதேச்சையாக புலி ஒன்று கரடியை அடித்து சாப்பிடும் நோக்கில் கரடியின் அருகில் சென்றுள்ளது.

புலி தன்னை வேட்டையாட வருவதை உணர்ந்த கரடி எதிர்த்து நின்று புலியை ஓட ஓட விரட்டுகிறது. மேலும், வேட்டையாட வந்த புலியுடன் மற்றொரு புலி கூட்டு சேர, அந்த புலியையும் தனி ஆளாக நின்று ஓட விட்டுள்ளது இந்த கரடி. இந்த காட்சியானது வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

புலியை கரடி விரட்டும் காட்சியை பார்க்கும்போது, யார் இடத்தில வந்து யார் சீன போடுறது..! என்ன மீறி எவனும் வர முடியாது என்பது போல் கரடியின் செயல் இருப்பதாக பார்வையாளர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.


Advertisement