வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
மக்களே உஷார்!. வங்கிகள் நாளை முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தம்!.
நாளை மற்றும் நாளை மறுநாள் 8 ,9 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக மத்திய வங்கி ஊழியர் சங்கங்கள் நாளை 8-ம் தேதி மற்றும் 9-ம் தேதி ஆகிய 2 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.
தமிழகத்தில் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், 5 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து ஐடிபிஐ, பேங்க் ஆஃப் பரோடா, அலாகாபாத் வங்கி ஆகிய வங்கிகள் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்கள் பெடரேஷன் ஆகியவை வரும் 8,9ஆம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மும்பை பங்குச் சந்தைக்கு அறிக்கை அனுப்பியுள்ளன.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் வெங்கடாசலம், வங்கி கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவேண்டும், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், வங்கிகளை தனியார் மயமாக்குவது மற்றும் இணைப்பது போன்ற நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.