தினமும் கத்தி அழுவேன்! பாத்ரூம் போகக் கூட முடியல... அவ்வளவு டார்ச்சல்! ₹70,000 அரசு வங்கி வேலையை தூக்கி போட்டு இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!!!



bank-job-quit-for-mental-peace-3834BU

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 31 வயது மதுரிமா, இரண்டு ஆண்டுகள் தீவிரமாக தயாராகி IBPS தேர்வில் வெற்றி பெற்று பொதுத்துறை வங்கியில் அதிகாரியாக சேர்ந்தார். மாதம் ரூ.70,000 சம்பளம் கிடைத்தபோதும், பணிச்சுமையும் மன அழுத்தமும் அவரது வாழ்க்கையை கடுமையாக பாதித்ததாக கூறப்படுகிறது. இறுதியில் மன அமைதிக்காக அந்த வேலையை ராஜினாமா செய்த அவர், தற்போது வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார்.

12 மணி நேரத்துக்கும் மேலான வேலை

வங்கியில் பணியில் சேர்ந்த பிறகு தினமும் 12 மணி நேரத்துக்கும் மேலாக வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக மதுரிமா தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களிலும் பணிச்சுமை இருந்ததாகவும், அலுவலகத்தில் கழிப்பறைக்குச் செல்லக்கூட அனுமதி கிடைக்காத சூழல் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக தனக்கு கடுமையான சிறுநீரகத் தொற்று ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கலிகாலம்... பள்ளிச் சீருடையுடன் ஓயோ ஹோட்டலுக்குள் நுழையும் மாணவ-மாணவிகள்..! அதிர்ச்சி சம்பவம்..!!!

பணிச்சுமையுடன் மூத்த அதிகாரிகளின் தரக்குறைவான பேச்சுகளும் மன அழுத்தத்தை அதிகரித்ததாக கூறப்படுகிறது. திருமணத்துக்குப் பிறகும் குடும்பத்துடன் போதிய நேரம் செலவிட முடியவில்லை. தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் அழும் அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும், எதிர்மறையான எண்ணங்கள் தோன்றியதாகவும் மதுரிமா தெரிவித்துள்ளார்.

ரூ.2 லட்சம் பாண்ட் தொகையை செலுத்தி ராஜினாமா

தொடர்ந்து அதே சூழலில் பணியாற்ற விரும்பாத மதுரிமா, தனது மன அமைதிக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலையை விட்டு வெளியேற முடிவு செய்தார். இதற்காக ரூ.2 லட்சம் பாண்ட் தொகையை அபராதமாக செலுத்தி, 2024 மார்ச் மாதத்தில் வங்கி பணியில் இருந்து ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளார்.

பாதி சம்பளத்தில் தொடங்கிய புதிய வாழ்க்கை

அரசுப் பணியை விட்ட பிறகு LinkedIn மூலம் பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் மாதம் ரூ.35,000 சம்பளத்தில், Work From Home முறையில் பணியில் சேர்ந்தார். சம்பளம் பாதியாக குறைந்தாலும், பணிச்சூழல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் கிடைத்த மாற்றம் தனக்கு நிம்மதியை அளித்ததாக மதுரிமா கூறியுள்ளார்.

தற்போது தனது திறமையின் மூலம் மீண்டும் ரூ.60,000 வரை சம்பளம் பெறும் நிலைக்கு வந்துள்ளதாகவும், ஹைதராபாத்தில் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது அனுபவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ள நிலையில், அதிக சம்பளம் மட்டுமல்லாமல் பணிச்சூழல் மற்றும் மன நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா என்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.

 

இதையும் படிங்க: பக்கத்து வீட்டு நர்ஸ்க்கு ஆறுதல் சொல்லப் போன வாலிபர்...! இறுதியில் நடந்த பெரிய ட்விஸ்ட்.... நம்பமுடியாது நள்ளிரவு சம்பவம்..!!!