98% மார்க் எடுத்தும் படிக்க அனுமதி வழங்காத கல்லூரியை சாதித்து கலாய்த்த இளைஞர்.. சாரே அடிபொலி சம்பவம் இதுதான்.!

98% மார்க் எடுத்தும் படிக்க அனுமதி வழங்காத கல்லூரியை சாதித்து கலாய்த்த இளைஞர்.. சாரே அடிபொலி சம்பவம் இதுதான்.!


Bangalore Sharan Hegde Troll Tweet

வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உறுதி செய்யும் வகையில், இளைஞருக்கு நடந்த ஜாக்பாட் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சேர்ந்தவர் சரண் ஹெட்ஜ். இவர் பொருளாதாரம் & முதலீடுகள் தொடர்பாக ஆலோசனை வழங்கும் நபராக இருந்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமானராகவும் இருக்கிறார். 

இந்நிலையில், சரண் ஹெட்ஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், பெங்களூர் வணிகவியல் பல்கலைக்கழகத்தில் தனக்கு மதிப்பெண் குறைவால் படிக்க அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பான விஷயத்தை பதிவு செய்து கல்லூரியை கலாய்த்து இருக்கிறார்.

அந்த பதிவில், "98 percentile CAT = No entry; 3.3 Mn followers = Guest speaker 🤩✅" என்று பதிவிட்டுள்ளார். அதாவது, அவர் CAT தேர்வில் 98 விழுக்காடு மதிப்பெண் எடுத்தபோது பெங்களூரில் இருக்கும் இந்திய மேலாண்மை நிறுவன கல்லூரியில் படிக்க அனுமதி கிடைக்கவில்லை. 

அதனால் அவர் வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்துவிட்டு இன்று சமூகத்தில் பிரதான நபராக உயர்ந்துவிட்ட நிலையில், அவரை அதே கல்லூரி நிர்வாகம் சிறப்பு பேச்சாளராக அழைத்துள்ளது. அதனை மேற்கோளிட்டு சரண் தனது ட்விட்டை பதிவு செய்துள்ளார்.