BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ஒத்த புகைப்படம்.. மாடலாக மாறிய சாலையில் பலூன் விற்கும் இளம்பெண்! நடந்தது என்ன??
திருவிழாவில் பலூன் விற்ற இளம்பெண் ஒருவர் மாடல் ஆகியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அண்டலூர் காவு பரசுராமன் கோயிலில் நடைபெறும் தைய்யம் விழா மிகவும் பிரபலமானது. இந்தத் திருவிழாவில் கிஸ்பு என்ற வட மாநில இளம்பெண் கோயில் வாசலில் அமர்ந்து ஊதிவைத்திருந்த பலூனை வியாபாரம் செய்துள்ளார்.
பலூன்க்கு இடையே அமர்ந்திருந்த கிஸ்புவை பார்த்த புகைப்படக் கலைஞர் அர்ஜுன் கிருஷ்ணன் அவரை புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் அதனை அவர்களது அனுமதியோடு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது பெருமளவில் வைரலானது. பின்னர் அர்ஜுன் கிருஷ்ணன் கிஸ்புவுக்கு அலங்காரம் செய்து மாடலிங் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
பின்னர் பழைய புகைப்படத்தையும், மாடலிங் புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் கிஸ்புவுக்கு ஏராளமான மாடலிங் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றது. ஒத்த புகைப்படத்தால் கிஸ்புவின் வாழ்க்கையை மாறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.