பகீர்.. மாயமான பெண் கழுத்தை அறுத்து படுகொலை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

பகீர்.. மாயமான பெண் கழுத்தை அறுத்து படுகொலை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!


Bagheer.. Mysterious woman was killed by slitting her throat.. Shocking information revealed in the investigation..!

சிங்கப்பல்லாபூர் சாம்ராஜ் பேட்டில் தனது கணவர் மட்டும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தவர் தீபா. இவர் தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள பேக்கரிக்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த சூழலில் அங்கு பணிபுரியும் திவாகர் என்பவருக்கும் தீபாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. மேலும் திவாகர் தனியாக வீடு எடுத்து வசித்து வந்ததால் தீபா அடிக்கடி அங்கு சென்று அவருடன் தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென்று தீபா காணாமல் போய் உள்ளார்.

Murder

இதனால் தீபாவின் கணவர் போலீஸில் தனது மனைவியை காணவில்லை என்று கூறி புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த சூழலில் திவாகர் வசித்த வாடகை வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது உடல் அழகிய நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு தீபா இறந்து கிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து தீபாவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Murder

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் தீபாவும் திவாகரும் கள்ளத்தொடர்பில் இருந்தது உறுதியாகிவுள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று திவாகர் தீபாவை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்துள்ளதால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.