இந்தியா

சபரிமலையில் நிலவும் பதட்டம்!. ஏராளமான போலீசார் குவிப்பு!.

Summary:

சபரிமலையில் நிலவும் பதட்டம்!. ஏராளமான போலீசார் குவிப்பு!.


சபரிமலையில் பெண்களை அனுமதி வழங்கக்கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்படும் நிலையில் கோவிலுக்கு வரும் குறிப்பிட்ட வயது பெண்கள் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்படுவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஐப்பசிமாத மாத பூஜைக்காக இன்று  ஐயப்பன் கோவில் நடை திறக்கபடும் நிலையில் முதல் முறையாக கோவிலுக்கு செல்லும் என்னத்துடன் பெண் பக்தா்கள் பலரும் கோவிலுக்கு செல்லத் தொடங்கியுள்ளனா்.

இந்நிலையில், சபரிமலைக்கு பெண் பக்தர்கள் சென்றால் அவர்களை பம்பை, நிலக்கல், பந்தளம் பகுதிகளில் தடுத்து நிறுத்துவதற்கு, இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர். பின்பு போலீசாரால் தடுத்துநிறுத்தப்பட்டு போராட்டங்கள் கலைக்கப்பட்டது.

இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் வழக்கமாக செல்லும் பக்தர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Advertisement