பெண்கள் அதிகம் மதுகுடிக்கும் மாநிலம் இந்தியாவிலேயே இதுதான்..! வெளியான ரிப்போர்ட்.!



Assam Tops India in Women Alcohol Consumption: Shocking Survey Report Revealed

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் முக்கிய மாநிலமாக கவனிக்கப்படும் அசாமில், பெண்கள் அதிகம் மதுபானம் வருந்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசாம் முதலிடம்:

இந்தியாவில் வசித்துவரும் பெண்களிடம் மதுபானம் அருந்தும் பழக்கம் தொடர்பாக மத்திய சுகாதார, குடும்பநல அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டது. தேசிய குடும்பம் சுகாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. அதாவது, இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் மதுஅருந்தும் மாநிலமாக அசாம் இருந்துள்ளது.

இதையும் படிங்க: நள்ளிரவில் இரட்டை கொலை.. ரவுடிகளை நோட்டமிட்டு வெட்டிய 8 பேர் கும்பல்.. பல்லாவரத்தில் பயங்கரம்.!

சராசரி உயர்வு:

மதுபானம் என்பது உடல்நலத்துக்கு கேடானது என்பது பலருக்கும் அறிந்த உண்மை. ஆணோ, பெண்ணோ மதுபானம் தேவையில்லாதது என பல விழிப்புணர்வு மேற்கொண்டாலும், சமீபகாலமாக பெண்களிடம் மதுபானம் அருந்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. ஒருசில மாநிலங்களில் இந்த விகிதம் தேசிய சராசரியை விட உயர்ந்தும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Assam

கிடுகிடு உச்சம்:

அசாம் மாநிலத்தை பொறுத்தமட்டில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்கள் 26.3% பேர் மதுபானம் அருந்துகின்றனர். முந்தைய ஆய்வில் 7.5% ஆக இருந்தது தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேகாலயாவில் 8.7% பெண்கள் மதுபானம் அருந்துகின்றனர். அருணாச்சலப்பிரதேசத்தில் 33.6% மதுப்பழக்கம் 3.3% ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில், ஆண்கள் 59% நபர்கள் மது அருந்தி வருகின்றனர்.