அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
சூனியம் வைப்பதாக பெண் உயிருடன் எரித்துக்கொலை; கணவரை கட்டிப்போட்டு கண்முன் நடந்த கொடூரம்.!
அசாம் மாநிலத்தில் உள்ள சோனித்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் பெண்மணி சங்கீதா காரி (வயது 30). இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சூரஜ் பக்வார் என்பவர், சங்கீதா சூனியம் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறி பிரச்சனை செய்துள்ளார்.
சம்பவத்தன்று பெண்ணின் கணவரை சூரஜ் உட்பட நால்வர் கும்பல் சேர்ந்து கட்டிப்போட்ட நிலையில், அவரின் மனைவியை கண்மூடித்தனமாக தாக்கி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி இருக்கின்றனர்.

இதனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த பெண்மணி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் கொலையாளிகளுக்கு வலைவீசி இருக்கின்றனர்.