முக்கோண காதலால் நடந்த விபரீதம்; 44ஐ போட்டுத்தள்ளிய இளம் ஜோடி.! அதிரவைக்கும் பின்னணி.!

முக்கோண காதலால் நடந்த விபரீதம்; 44ஐ போட்டுத்தள்ளிய இளம் ஜோடி.! அதிரவைக்கும் பின்னணி.!


Assam Guwahati man killed by Couple  

 

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி விமான நிலையத்திற்கு அருகேயுள்ள தனியார் ஹோட்டலில், நபர் ஒருவர் அறையை முன்பதிவு செய்து இருக்கிறார். சம்பவத்தன்று இவரின் அறை நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை. இதையடுத்து, விடுதி ஊழியர் சென்று பார்த்தபோது, அறை எடுத்தவர் மூக்கில் இரத்தம் வழிந்தவாறு தரையில் மயங்கி இருந்துள்ளார். 

பின் இதுதொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நபர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். அவரின் அடையாளம் குறித்து சோதித்தபோது, மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த சந்தீப் குமார் (வயது 44) என்பதை உறுதி செய்தனர்.

இவருக்கு அஞ்சலி (வயது 25) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. கொல்கத்தா விமான நிலைய உணவு விடுதியில் அஞ்சலி வேலை பார்த்து வந்துள்ளார்.இதனிடையே, பிகா ஷா என்ற 23 வயது நபருடன் அஞ்சலி தொடர்பில் இருந்து, தன்னை திருமணம் செய்ய அஞ்சலிக்கு பிகா நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். 

Assam News

அஞ்சலி - சந்தீப் ஜோடி நெருக்கமாக இருந்தபோது எடுத்துக்கொண்ட தனிமையான படங்கள் சந்தீப்பின் செல்போனில் இருக்க, அந்த புகைப்படம் மற்றும் விடியோவை பெற அஞ்சலி - பிகா ஜோடி திட்டம் தீட்டி இருக்கிறது. இதற்காக கொல்கத்தா விமான நிலையத்தில் சந்திப்பு நடந்துள்ளது. 

பின் அங்கிருந்து கவுகாத்தி சென்றதும் அஞ்சலி - சந்தீப் ஜோடி விடுதிக்கு சென்றுள்ளது. அங்கு பிகா முன்னதாகவே அறையெடுத்து தங்கி இருக்க, சந்தீப் பிகாவை நேரில் பார்த்ததும் சண்டையிட்டு இருக்கிறார். இதனால் இருதரப்பு மோதல் ஏற்பட்டுள்ளது. சந்தீப்பை தள்ளிவிட்டதில் அவர் உயிரிழந்துள்ளார். அவரிடம் இருந்த 2 செல்போன்கள் parithu செல்லப்பட்டுள்ளன. 

கவுகாத்தியில் இருந்து கொல்கத்தா தப்ப முயன்ற ஜோடியை காவல் துறையினர் விமான நிலையத்திலேயே கைது செய்தனர். அதிகாரிகள் மேற்கொண்ட துரித விசாரணை காரணமாக மேற்கூறிய உண்மை அம்பலமாகி இருக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அஞ்சலி - பிகா ஜோடியை அதிகாரிகள் கைது செய்தனர்.