"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
பழைய டெக்னீகில் 2400 கிலோ கஞ்சா லாரியில் கடத்தல்; சோதனையில் அதிர்ந்துபோன அதிகாரிகள்..! 2 பேர் கைது..!
லாரியில் கஞ்சாவை மறைத்துவைத்து கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள்ளனர்.
அசாம் மாநிலத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு கஞ்சா போதைப்பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தி விற்பனை செய்யப்படுவது வழக்கமாகியுள்ளது.
இந்த நிலையில், திரிபுரா - அசாம் எல்லைப்பகுதியில் டன் அளவிலான கஞ்சா லாரியில் கடத்தி செல்லப்படுவதாக அசாம் மாநில காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்திய காவல் துறையினர், அசாம் - திரிபுரா மாநில எல்லையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த லாரியை மடக்கி சோதனை செய்கையில், லாரியின் டிரம்மிற்குள்ளும், அதற்கு அடியிலும் வைத்து கஞ்சா கடத்தப்பட்டது உறுதியானது. மொத்தமாக 2400 கிலோ (2.4 டன்) கஞ்சா கைப்பற்றப்பட்டது. 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.