பிரசவத்திற்காக வந்த பெண்!! அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..



Assam baby weighs 5.2 kg at birth

அசாம் மாநிலத்தில் புதிதாக பிறந்த குழந்தை ஒன்று மருத்துவர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் சச்சர் என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் படல்தாஸ் - ஜெயா தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில் 27 வயதாகும் ஜெயா மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். இதனை அடுத்து ஜெயாவிற்கு பிரசவ தேதி மே 29 என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த சமயம் கொரோனா உச்சத்தில் இருந்ததால் ஜெயாவின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. அதேநேரம் ஜெயாவுக்கு பிரசவ வலி வரவே இல்லை. இந்நிலையில் நாட்கள் சென்றுகொண்டே இருக்க, குறித்த தேதியில் பிரசவம் நடக்கவில்லை என்றால் குழந்தை அல்லது தாய்க்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடப்போகிறது என்ற பயத்தில், ஜெயாவின் குடும்பத்தினர் அவரை  ஜூன் 15 ஆம் தேதி சதிந்திரா மோகன் தேவ் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பிரசவத்திற்காக அனுமதித்துள்ளனர்.

இனி சுக பிரசவத்துக்கு வாய்ப்பு இல்லை எனக்கூறி, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். குழந்தையை வெளியே எடுத்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் ஜெயாவுக்கு பிறந்த குழந்தை சுமார் 5.2 கிலோ கிராம் எடை இருந்துள்ளது.

பொதுவாக பிறகும் குழந்தைகள் அதிகபட்சம் 4 கிலோவரை எடை இருப்பது வழக்கம் என்றாலும், ஜெயாவுக்கு பிறந்த குழந்தை 5.2 கிலோ எடை இருப்பது பெரிய ஆச்சரியமான விஷயம் எனவும், அதிக எடையுடன் பிறந்த முதல் குழந்தை இதுவாக கூட இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.