இந்தியா

சிறுத்தையை துடிக்க துடிக்க கொலை செய்து உடலை ஊர்வலம் கொண்டுபோன அசாம் மக்கள்..! ஏழு பேரை கைது செய்த போலீசார்..!

Summary:

Asam people killed leopard and video goes viral

சிறுத்தையைக் கொன்று உடலை ஊர்வலம் கொண்டுபோன அசாம் மாநிலத்தை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளன்னர்.

அசாமில் சிறுத்தைகள் கொல்லப்படுவது வடிக்கையாகிவிட்டநிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள கடப்பாரி என்னும் பகுதியில் மேலும் ஒரு சிறுத்தையை மக்கள் கொன்றுள்ளனர். இந்த வருடத்தில் மட்டும் அசாமில் இதுவரை 5 சிறுத்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

image

சிறுத்தையை கொலை செய்த அவர்கள் அதனை ஊர்வலக எடுத்துச்சென்று வெற்றிகொண்டாட்டத்தில் ஈடுபட வீடியோ வைரலானநிலையில் அதில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த சிறுத்தையின் தோல், பல், நகங்கள் போன்றவற்றையும் அந்த மக்கள் தனியாக எடுத்துவிட்டதாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொல்லப்பட்ட சிறுத்தை கடந்த சில நாட்களாக மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நடமாடியதாகவும், கோழி, ஆடுகளை அது வேட்டையாடிவந்ததாகவும் அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.


Advertisement