சாப்பிட எதுவும் கிடைக்கல..! 12 அடி நீள ராஜநாகத்தை உணவாக்கிய கிராமவாசிகள்.! அதிர்ச்சி தகவல்.!

சாப்பிட எதுவும் கிடைக்கல..! 12 அடி நீள ராஜநாகத்தை உணவாக்கிய கிராமவாசிகள்.! அதிர்ச்சி தகவல்.!



Arunachal Hunters Kill King Cobra For Feast

ஊரடங்கு உத்தரவால் சமைத்து சாப்பிட அரிசி இல்லாமல், ராஜநாகத்தை வேட்டையாடி சாப்பிட்ட மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் வரும் மே 3 வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். மேலும், தினக்கூலிகளான பல்வேறு மக்கள் தங்கள் வேலைகளை இழந்து சாப்பாட்டிற்கே சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் மலைக்கிராமத்தில் வசிக்கும் மூவர் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வேட்டையாடி, அதனை தங்கள் தோள் மீது போட்டுக்கொண்டு. "உணவு இல்லாததால், காட்டுக்குச் சென்றோம் அங்கு இதைப் பார்த்தோம், பிடித்து வந்தோம்"  என கூறும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலானாது.

இந்திய சட்டப்படி ராஜநாகம் என்பது பாதுகாக்கப்பட்ட ஊர்வன வகை. அதை வேட்டையாடினால் ஜாமீன் இல்லாத சிறைத்தண்டனை கிடைக்கும். உணவு இல்லாததால் ராஜநாகத்தை வேட்டையாடிய மூவர் மீதும் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.