ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
கோவில் விழாவில் மயங்கி விழுந்து உயிரிழந்த கலைஞர்.. பார்வதி வேடமிட்டவாறு நடந்த சோகம்..!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிஷ்னா பகுதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் யோகேஷ் குப்தா என்ற கலைஞர் பார்வதியின் வேடமிட்டு நடித்து வந்தார்.
அப்போது, அவர் திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்து சில நொடிகளில் உயிரிழந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. யோகேஷ் சாதாரணமாக மயங்கி விழுந்துள்ளார் என்று எண்ணியவர்கள் சுதாரித்தபோது உண்மை தெரியவந்தது.

அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதும், மருத்துவர்கள் அவரின் உயிரிழப்பை உறுதி செய்துள்ளனர். யோகேஷ் குப்தாவின் மறைவு கோவிலில் இருந்தோரை சோகத்திற்கு உள்ளாக்கியது.