பிரபல ஓவியர் திடீர் மரணம்..! பல கதாபாத்திரங்களுக்கு ஓவியம் மூலம் உயிர் கொடுத்தவரின் உயிர் பிரிந்தது..!!artiest-vasudevan-nambotri-died-in-kerala

கேரளத்தின், கோட்டக்கல் என்னும் ஊரை சேர்ந்தவர் ஓவியர் வாசுதேவன் நம்பூதிரி இவருக்கு வயது 97. இவர் மிகவும் பிரபலமான ஓவியராக இருப்பவர். தற்போது வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இவர் மலையாள இலக்கியத்தில் உள்ள பல கதா பாத்திரங்குளுக்கு உயிரூட்டியவர். தனது ஓவியங்கள் மூலம் அவற்றுக்கு உயிர் அளித்துள்ளார் வாசுதேவன் நம்பூதிரி என்றே கூறவேண்டும். 

                                     KERALA

இவர் 1925-ம் ஆண்டு பிறந்துள்ளார். அவரது இளம் வயதில் இருந்தே இவருக்கு ஓவியம் மீது பிரியம் ஏற்பட்டு, அதுமுதல் ஓவியம் வரைய தொடங்கினார். அவரது, சிறு வயதில் பாரம்பரிய மருத்துவம் குறித்தும் சமஸ்கிருதமும் பயின்றார். முதலில் இவர் ஓவியத்தை அவரது வீட்டு சுவர்களில் இருந்தே தொடங்கினார். அதற்க்கு அடுப்பு கரியை பயன்படுத்தினர். பின்னர், கோவில் முற்றத்தில் மணலால் வரைய தொடங்கினார். அதன்பின், பிரபல சிற்பியும், ஓவியருமான வரிக்காச்சேரி நம்பூதிரி இவரது ஆர்வத்தை பார்த்து, சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

960-ல் கேரளத்திருக்கு திரும்பிய அவர் புகழ் வாய்ந்த எழுத்தார்களின் நாவல்கள், சிறுகதைகளை தனது ஓவியத்தின் மூலம் உயிரூட்டினார். நடிகர் மோகன்லால் உட்பட ஓவியர் வாசுதேவன் நம்பூதிரியின் ரசிகர்களாக பல பிரபலங்கள் இருந்தனர். இவரது  மனைவி மிருணாளினி மற்றும் பரமேஸ்வரன், வாசுதேவன் என்ற மகன்களும் இருக்கிறார்கள். இவரது இந்த மறைவிற்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.