இந்தியா

வீட்டில் படுத்திருந்த சிறுமியின் கழுத்தை 2 மணி நேரம் சுற்றி, பின் கடித்த நாகப்பாம்பு.! பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம்.! ஷாக் வீடியோ

Summary:

மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 வயது சிறுமி ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் அவரது வீட்டில் படுத்த

மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 வயது சிறுமி ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் அவரது வீட்டில் படுத்திருந்த போது நாக பாம்பு ஒன்று சிறுமியின் மீது ஏறி கழுத்தை சுற்றி இருந்துள்ளது. இதனை பார்த்த சிறுமியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். சிறுமி அசைந்தால் பாம்பு எதாவது செய்துவிடும் என்பதால் குடும்பத்தினர் சிறுமையை அசையாமல் இருக்கும்படி கூறியுள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக பாம்பு பிடிப்பவருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இரண்டு மணி நேரம் கழித்து பாம்பு அங்கிருந்து நகர தொடங்கிய போது சிறுமி சற்று உடலை அசைத்துள்ளார். அப்போது சிறுமியின் கையில் கொத்திவிட்டு பாம்பு அங்கிருந்து நகர்ந்து சென்றது. இதனையடுத்து உடனடியாக சிறுமியை மீட்ட குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.  தற்போது சிறுமி ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் எனவும், அவர் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் தெரியவந்துள்ளது. சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்து கொண்டது அதிசயமான விஷயம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement