என் கண் முன்னே என் மனைவியை தொடுகிறாயா... மருத்துவரை வெளுத்து வாங்கிய கணவர்க்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..கேரளாவில் பரபரப்பு..!

என் கண் முன்னே என் மனைவியை தொடுகிறாயா... மருத்துவரை வெளுத்து வாங்கிய கணவர்க்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..கேரளாவில் பரபரப்பு..!


are-you-touching-my-wife-in-front-of-my-eyeshusband-who

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பிவி ஜாம்ஷெட். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் அந்த மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் ஜாம்ஷெட்டின் மனைவிக்கு சிகிச்சை அளித்துள்ளார். இதனையடுத்து ஜாம்ஷெட் மனைவியின் உடலை மருத்துவர் தொட்டுப் பார்த்து பரிசோதனை செய்துள்ளார். அப்போது அங்கு இருந்த ஜாம்செட் மனைவியின் உடலை தொட்டுப் பார்த்து பரிசோதனை செய்ததற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

doctor

இதனையடுத்து மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வரும் எல்லா நோயாளிகளையும் தொட்டுப் பார்த்து தான் பரிசோதனை செய்ய முடியும் என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜாம்செட் மருத்துவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் படுக்காயம் அடைந்த மருத்துவர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து புகாரின் பெயரில் ஜாம்ஜெட்டை கைது செய்ய போலீசார் முயற்சி செய்தனர். ஆனால் காவல்துறையினர் தன்னை கைது செய்யப் போவதை அறிந்த ஜாம்செட் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உடலை மருத்துவர்கள் தொட்டு பார்த்து பரிசோதனை செய்வது வழக்கம்தான் என்றும் இதனால் மருத்துவர்களை தாக்குவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி நீதிபதிகள் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தனர்.