சார்ஜரால் அடித்து, காயமாக்கி, அந்த இடத்தில் மிளகாய் பொடியை தூவி, தாயின் கள்ளகாதலன் கொடூரம்.! 



anthra illegal boy friend attack womens child

கருத்து வேறுபாடால் பிரிவு

ஆந்திர மாநிலம் கங்கா ரெட்டி கூடம் பகுதியைச் சேர்ந்த சசி என்ற பெண் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது கணவரை பிரிந்து மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கணவர் இல்லாமல் தனிமையில் வசித்து வந்த அவருக்கு அதே பகுதியை சேர்ந்த பவன் என்ற நபர் அறிமுகமாகி இருக்கிறார்.

குழந்தைகள் மீது தாக்குதல்

இருவரும் ஒரு கட்டத்தில் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். சசியின் குழந்தைகள் 3 பேரையும் பவன் அடித்து மிகவும் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவ தினத்தில் செல்போன் சார்ஜர் ஒயரை கொண்டு 3 குழந்தைகளையும் அவர் மிகவும் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதையும் படிங்க: இறந்தவரை பாடையில் தூக்கி சென்ற போது, உறவினர்களுக்கு அதிர்ச்சி.! 

Anthra

அடி தாங்காமல் அலறிய குழந்தைகள்

கொடுமையின் போது பிள்ளைகளை காப்பாற்ற முடியாமல் அந்த தாய் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் வலி தாங்காமல் அந்த குழந்தைகள் கதறி துடிக்க சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கைது நடவடிக்கை

இது பற்றிய காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் வந்து விசாரணை நடத்தி தாக்குதலை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து, பவன் மீது வழக்கு பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: "சித்தப்பா சொல்றத கேளுடி" மகளை கள்ளகாதலனுக்கு இரையாக்கிய தாய்.!