இந்தியா

16 வயது பருவ ஈர்ப்பு.. பெற்றோர் கண்டித்ததால், கல்லூரி மாணவி விபரீதம்.. அலறிய மாணவிகள்.!

Summary:

16 வயது பருவ ஈர்ப்பு.. பெற்றோர் கண்டித்ததால், கல்லூரி மாணவி விபரீதம்.. அலறிய மாணவிகள்.!

கல்லூரியில் படிக்கும் போது காதல் வேண்டாம், நன்றாக படித்து முடித்ததும் அதைப்பற்றி யோசிக்கலாம் என்று பெற்றோர் அறிவுரை கூறியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம், கே.வி பள்ளி கர்ணமிட்டா பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தய்யா. இவரின் மனைவி சரஸ்வதி. தம்பதிகளுக்கு 3 மகள்கள் உள்ளனர். கோவிந்தய்யா - சரஸ்வதி குவைத்தில் பணியாற்றி வரும் நிலையில், இவர்களின் இரண்டாவது மகள் விஷ்ணு பிரியா (வயது 16), திருப்பதியில் உள்ள பத்மாவதி கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பட்டம் பயின்று வருகிறார். 

இவர் கல்லூரியில் படித்து வரும் போதே, வாலிபருடன் ஏற்பட்ட பழக்கம் நட்பாக மாறியதாக தெரியவருகிறது. இதனால் இருவரும் காதலித்து வந்த நிலையில், இந்த விவகாரம் விஷ்ணு பிரியாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, படிக்கும் வயதில் காதல் தேவையற்றது. படிப்பை முடித்ததும் காதல் - திருமணம் தொடர்பாக பேசலாம். இப்போது படிப்பில் கவனம் செலுத்து என்று பெற்றோர் கண்டித்து அறிவுரை கூறியுள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த விஷ்ணு பிரியா, நேற்று மாலை நேரத்தில் விடுதியின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன பிற மாணவிகள், விடுதி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் திருப்பதி காவல் துறையினருக்கு சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சக மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement