"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
#ShockingNews: அலட்சியமாக தண்டவாளத்தை கடக்க முயற்சி.. 5 பேர் இரயிலில் அடிபட்டு பரிதாப சாவு..!
இரயில் தண்டவாளத்தினை அலட்சியமாக கடக்க முயற்சித்து 5 பேர் உடல் சிதறி பலியான சோகம் நடந்துள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஜி சிகடம் படுவா பகுதியில் இரயில் தண்டவாளம் செல்கிறது. திங்கட்கிழமை இரவில் அவ்வழியே கவுகாத்தி அதிவிரைவு இரயில் பயணம் செய்த நிலையில், படுவா பகுதியில் திடீரென இரயில் நின்றுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரயில் நின்று இருக்கலாம் என எண்ணியிருந்த நிலையில், இரயிலில் இருந்து 5 க்கும் மேற்பட்டவர்கள் இறங்கி தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சி செய்தனர். அப்போது, எதிர்திசையில் கோனார்க் அதிவிரைவு இரயில் வந்த நிலையில், தண்டவாளத்தை கடக்க முயற்சித்த 5 பேரின் மீது இரயில் மோதியது.
இந்த விபத்தில், 5 பேர் நிகழ்விடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக ஸ்ரீகாகுளம் இரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஐவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எங்கு சென்றார்கள்? என்பது தொடர்பான விசாரணையை நடத்தி வருகின்றனர். அனைவரின் உடலும் சிதறி கிடந்ததால், அவர்களை அடையாளம் காணும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.