அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
9 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை.. தாய் இறந்தும் பிறந்த ஆண் குழந்தை.. கண்ணீர் சோகத்தில் உறவினர்கள்.!
நிறைமாத கர்ப்பிணி பெண்மணி திடீரென தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரின் உடலில் இருக்கும் குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக வெளியே எடுத்தனர். தாய் இறந்துவிட்ட நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை மருத்துவமனையில் பத்திரமாக உள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மஞ்சிராளா மாவட்டம், என்.டி.ஆர் நகர் பகுதியை சார்ந்தவர் ரமா (வயது 25). இவரின் கணவர் ஆனந்த். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 4 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. முதல் முறையாக கர்ப்பமான ரமாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்னதாக ரமா மீண்டும் கர்ப்பமான நிலையில், அவருக்கு டிச. 6 ஆம் தேதியான நேற்று மருத்துவர்கள் பிரசவ தேதி கொடுத்துள்ளனர். ஆனால், அவர் டிச. 5 ஆம் தேதி தீடீரென வீட்டில் தனியாக இருக்கையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் உடனடியாக செயல்பட்டு குழந்தையை அறுவை சிகிச்சை மூலமாக வெளியே எடுத்துள்ளனர். குழந்தை பத்திரமாக உள்ள நிலையில், இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், ரமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக பெண்ணின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. ரமா தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்பியதாகவும், முதலில் பெண் குழந்தை பிறந்துவிட்ட நிலையில், இரண்டாவதும் பெண் குழந்தையாக பிறந்துவிடலாம் என அஞ்சி அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.