இந்தியா வீடியோ

சார்.. அவன் மேல கேஸ் போடுங்க.. காவல் நிலையத்தில் கலக்கிய குட்டிஸ்.. வைரல் வீடியோ.!

Summary:

சார்.. அவன் மேல கேஸ் போடுங்க.. காவல் நிலையத்தில் கலக்கிய குட்டிஸ்.. வைரல் வீடியோ.!

நாம் சிறுவயதில் செய்த செல்லத்தனமான சேட்டைகளை நமது பெற்றோரிடம் கேட்டால் சிரித்துக்கொண்டே கூறுவார்கள். அன்று நினைவில் இருந்தவை, இன்று தொழில்நுட்பத்தின் உதவியுடன் பதிவு செய்யப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. 

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கர்னூல் கிராமத்தை சார்ந்த 4 சிறார்கள், அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று ஒருவரின் மீது புகார் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த 4 சிறார்களுடன் வந்த சிறுவன், முதலில் சற்று தயங்கி நிற்கிறான். 

பின்னர், காவல் அதிகாரி சிறுவர்களிடம் விஷயத்தை விசாரித்தபடியே, என்ன நடந்தது என்று கேட்டு வீடியோ பதிவு செய்கிறார். அதற்கு பதிலளிக்கும் ஒரு சிறுவன், இவன் எனது பென்சிலை திருடிவிட்டான் என்று கூறுகிறான். 

மேலும், அவனின் மீது நான் புகார் அளிக்க வேண்டும். அவன் மீது புகார் பதிவு செய்து, சிறையில் அடைக்க வேண்டும் என்று தெரிவிக்கிறான். இதனைக்கேட்ட காவல் அதிகாரியோ, பென்சிலை எடுத்த சிறுவனுக்கு அறிவுரை கூறி, சிறுவர்களிடம் சமாதானம் பேசி கைகுலுக்க வைத்து அனுப்பி வைக்கிறார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 


Advertisement