பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சிறுமி பரிதாப பலி; ஓட்டுநர், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சோகம்.!
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜம்மலைக்குடு பகுதியில் நர்சரி பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சிறுமி பயின்று வரும் நிலையில், அவர் தினமும் பள்ளி பேருந்து உதவியுடன் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று சிறுமி பேருந்தில் ஏற முயற்சித்தபோது தவறி விழுந்துள்ளார். இதனை கவனிக்காத ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால், சிறுமியின் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் பயத்தில் தப்பி ஓடிவிட, தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.