ரூ.4.5 கோடி மதிப்பிலான நகைகள் மாயம்: ஸ்டேட் பேங்க் லாக்கரில் கைவைத்த ஊழியர்கள்.. துணை மேலாளர் தற்கொலை.!

ரூ.4.5 கோடி மதிப்பிலான நகைகள் மாயம்: ஸ்டேட் பேங்க் லாக்கரில் கைவைத்த ஊழியர்கள்.. துணை மேலாளர் தற்கொலை.!



Andhra Pradesh Srikakulam Kara Bharat State Bank Assistant Manager Suicide 

 

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாக்குளம் மாவட்டம், காரா பகுதியில் பாரத் ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் கிளை மேலாளராக சொப்ன பிரியா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த கிளையை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களின் நகைகளை அடகு வைத்துள்ளனர். 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாடிக்கையாளர்கள் நகைக்கடனுக்கான பணத்தை திரும்பி செலுத்தி விட்டு, மீண்டும் தங்களின் நகையை கேட்டுள்ளனர். அப்போது லாக்கரில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த நகைகள் மயமாகியுள்ளது உறுதியானது. தீவிர விசாரணையில் 2400 பேரின் நகைகள் மாயமானது தெரியவந்தது.

இதன் இன்றைய மதிப்பு ரூ.4.5 கோடி ஆகும். நகைகள் மாயமான செய்தி உள்ளூர் மக்களுக்கு தெரிய வந்ததால், அவர்கள் வங்கியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பதறிப்போன வங்கியின் துணை மேலாளர் சொப்ன பிரியா விடுமுறையில் சென்றுள்ளார்.

வங்கியில் பணியாற்றி வந்த ஆறு ஊழியர்கள் நகை மோசடிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டதால், துணை மேலாளர் சொப்ன பிரியா, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சொப்ன பிரியா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.