தறிகெட்டு வந்த தனியார் பேருந்து - டிராக்டர் மோதி பயங்கர விபத்து: 4 பேர் பரிதாப பலி.!



andhra Pradesh Bus Tractor Collison 4 Died 

 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனந்தபுரமு மாவட்டம், கல்லூர் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். 

தனியார் பேருந்தும் - அரிசி மூடைகளை ஏற்றி வந்த டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் பேருந்து மற்றும் டிராக்டரில் பயணம் செய்த நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேகமாக வந்த பேருந்து - டிராக்டர் மீது மோதி விபத்தில் சிக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தோரின் உடல் காவல் துறையினரால் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.