எந்த மகனுக்கும் இப்படி ஒரு நிலைமை வர கூடாது!! உயிரிழந்த தாயின் சடலத்தை தூக்கிச்செல்ல ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் கொண்டு சென்ற மகன்..Andhra man ride bike with mother dead body

உயிரிழந்த தாய்யை மகன் இருசக்கர வாகனத்தில் வைத்து அழைத்துச்செல்லும் காட்சிகள் இணையத்தில் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா அச்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் ஆந்திரா மாநிலம் காகுளம் மாவட்டத்தை சேர்ந்த செஞ்சுலா என்ற வயதான பெண்மணி ஒருவர் உடல்நல குறைவால் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த அவரது உடலை அவரது மகன் தனது சொந்த கிராமமான கில்லோய் கிராமத்திற்கு கொண்டுசெல்ல அந்த பகுதியில் இருந்த தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் யாரும் வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் உதவிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் வேறு வழியில்லாமல் உயிரிழந்த தனது தாயின் உடலை அவரது மகன் இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்ல திட்டமிட்டுள்ளார். தனது இருசக்கர வாகனத்தில் தனது நண்பனை பின்னால் அமரவைத்து, நடுவில் தனது தாயாரின் உடலை வைத்தபடி அவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் வீடியோ காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.