நள்ளிரவு.. தானாக நகர்ந்த அரசுப் பேருந்து.. திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் திகில் CCTV காட்சி..Andhra government bus moved automatically at midnight viral video

ஆந்திராவில் நள்ளிரவில் பேருந்து ஒன்று தானாக நகர்ந்து சென்று வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில், அரசு பேருந்து ஒன்றின் ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். இதனை அடுத்து பேருந்து நிலையத்தில் மற்ற பேரூந்துகளுடன் நிறுத்தப்பட்டிருந்த அந்த பேருந்து தானாக நகர்ந்துசென்றுள்ளது.

பேருந்து நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து தானாக நகர ஆரம்பித்த பேருந்து, சிறிது தூரம் சென்று அருகில் இருந்த பேருந்து பயணிகள் காத்திருப்பு பகுதியில் இருந்த தூணின் மீது மோதி நின்றுள்ளது. நள்ளிரவு என்பதால் அந்த இடத்தில் பெரிதாக கூட்டம் இல்லை என்பதால் பேருந்து பயணிகள் யார் மீதும் மோதவில்லை.

இந்நிலையில் பேருந்து தானாக நகர்ந்துசென்று பேருந்து பயணிகள் காத்திருப்பு பகுதியில் இருந்த தூணின் மீது மோதி நிற்கும் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.