மருத்துவமனையில் சிகிச்சையில்... அரை மயக்கத்தில் இருந்த பெண்ணை... பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர்...!!An employee who raped a semi-conscious woman in a hospital...

கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகே மையன்னூர் பகுதியை சேர்ந்தவர் சசிதரன் (55). இவர் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஊழியராக உள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக 36 வயது பெண்  அனுமதிக்கப்பட்டு இருந்தார். 

மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இதைத் தொடர்ந்து அந்த பெண் தீவிர சிகிச்சை பிரிவில் மாற்றப்பட்டார். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வெளியே சென்ற போது, அந்த பெண்ணை சசிதரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அப்போது அரை மயக்கத்தில் இருந்த பெண் இதுகுறித்து தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து கோழிக்காடு மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் காவல் துறையில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சசிதரனை பிடித்து விசாரணை செய்தனர். 
விசாரணையில் அறுவை சிகிச்சை முடிந்து அரை மயக்கத்தில் இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை சசிதரன் ஒத்துக்கொண்டார். 

காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சசிதரனை கைது செய்தனர். அதன் பின் அவரை கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.