அரசியல் இந்தியா

மத்திய மந்திரி அமித்ஷாவின் தற்போதைய உடல்நிலை.! மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட புதிய தகவல்!

Summary:

amit shah helth condition

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நாடுமுழுவதும் மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சினிமா பிரபலங்கள் என பலரையும் கொரோனா பாதிப்புகள் விட்டு வைக்கவில்லை.  சமீபத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும் பாதிப்பு உறுதியானது.  கடந்த ஒரு வாரம் வரை அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். பின்னர் அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதன்பின்னர் அமித்ஷா, தனது டுவிட்டரில் கொரோனா பாதிப்பில் இருந்து தான் குணமடைந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.

பின்னர் அமித்ஷா பூரண குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால், அவருக்கு சுவாசிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்ட்டது. அதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம்  தெரிவித்துள்ளது.


Advertisement