ஓரினசேர்க்கை திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது : நீதிமன்றம் அதிரடி.!

ஓரினசேர்க்கை திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது : நீதிமன்றம் அதிரடி.!


Allahabad HC Reject Petition Appeal Lesbian Married Couple Wants Identity

2 பெண்கள் பெற்றோரின் எதிர்ப்பை மீறி தன்பாலின ஈர்ப்பு காதலால் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களின் கோரிக்கையை அலகாபாத் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரை சேர்ந்த 22 வயது இளம்பெண், தன்னுடன் கல்லூரியில் பயின்று வந்த 21 வயது இளம்பெண்ணுடன் காதல் வயப்பட்டுள்ளார். இதனையடுத்து, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் 21 வயது பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. தனது மகள் தன்பாலின சேர்க்கை காதல் வயப்பட்டுள்ளதை எண்ணி அதிர்ந்த பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து, காதல் ஜோடி வீட்டினை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு தனியே வாழ்க்கையை தொடங்க, 21 வயது இளம்பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்கை பதிவு செய்து விசாரணையை கிடப்பில் போட்ட நிலையில், அலகாபாத் உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். மனுவை ஏற்று விசாரணை செய்த நீதிபதிகள், காதல் ஜோடிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வர பிடிவாரண்ட் கொடுத்தது. 

அப்போது, வழக்கறிஞர் உதவியுடன் நீதிமன்றத்தை அணுகிய தன்பாலின காதல் ஜோடி, "நாங்கள் இருவரும் விருப்பத்தின் பேரில் திருமணம் செய்துகொண்டோம். எங்களின் திருமணத்தை நீதிமன்றம் அனுமதி அளித்து உறுதி செய்ய வேண்டும். இந்து சமய சட்டம் மற்றும் அரசியலமைப்பு சரத்தின்படி, இருவரின் திருமணம் என்பது கூறப்பட்டுள்ளது. அது இரு பாலராகவும் அல்லது ஒரே பாலினத்தை சேர்ந்த இருவராகவும் இருக்கலாம். ஆகையால், எங்களின் திருமணத்திற்கு அனுமதி வேண்டும்" என்று தெரிவித்தது. 

Uttar pradesh

இம்மனுவை விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பெண்ணின் தாய் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், "இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்து சட்டத்தின்படி இருபாலர் என்பது ஆண் - பெண் திருமணமே என கூறப்பட்டுள்ளது. இவர்களின் காதல் விவகாரத்தில் இந்து திருமண சட்டம் எவ்வித அனுமதி அளிக்கவும் வழிவகை இல்லை. இந்து இந்திய கலாச்சாரம் மற்றும் இந்து மதத்திற்கு எதிரானது. இந்த திருமணம் செல்லாது" என்று தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி, தன்பாலின ஈர்ப்பு ஜோடியின் மனுத்தாக்களை நிராகரித்து தள்ளுபடி செய்தார். மேலும், தாயின் ஆட்கொணர்வு மனுவையும் தள்ளுப்படி செய்து, "திருமணம் என்பது இரு தனிநபரின் சங்கமம் இல்லை. ஆணிற்கும் - பெண்ணிற்கும் உயிரியல் கோட்பாடு. அதன் எதிர்கால நோக்கம் புரிந்தே மத்திய அரசு ஓர்பாலின திருமணத்தை எதிர்க்கிறது" என்று தெரிவித்தார்.