ஓராண்டுக்குள் அனைத்து சுங்கச்சாவடிகளும் மூடப்படும்.. போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதி..

ஓராண்டுக்குள் அனைத்து சுங்கச்சாவடிகளும் மூடப்படும்.. போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதி..



All Toll gats will be removed with in a year

இன்னும் ஓராண்டில் சுங்கச்சாவடிகள் இல்லாத நெடுஞ்சாலைங்களை காணமுடியும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, "நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைக்கில் உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்தும் நீக்கப்பட்டு, விரைவில் ஜிபிஎஸ் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

toll gate

மேலும் பழைய வாகனங்களை கழித்துக் கட்டும் அரசின் கொள்கைகளை வெளியிட்ட அவர், அரசின் இந்த புதிய கொள்கைகளால் ஆட்டோமொபைல் துறையின் லாபம் இரட்டிப்பாகும் என்றும் அவர் கூறினார். அதேபோல் சாலை விபத்துகளை குறைக்கவேண்டும் எனவும், கொரோனாவை விட அதிக உயிர்களை சாலை விபத்துகள் பலி வாங்கி விட்டதாக வேதனையுடன் குறிப்பிட்டார்".