இந்தியா

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடி தத்தளித்த நபர்! லாவகமாக மீட்ட விமானப்படையினர்! வைரல் வீடியோ!

Summary:

airforce soldiers rescue a man from river

கடந்த சில மாதங்களாக இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் பிலஸ்பூர் பகுதியில் உள்ள அணை ஒன்றில் கனமழை காரணமாக உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

பிலாஸ்பூர் பகுதியில் உள்ள குத்தாகட் அணையில் அதிகளவில் நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ள சூழலில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் நபர் ஒருவர் சிக்கிக் கொண்டுள்ளார்.

உயிருக்குப் போராடி தத்தளித்துக் கொண்டிருந்த அந்த நபரை தீயணைப்புத் துறையினரால் கூட மீட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து விமானப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டருடன் விரைந்த விமானப்படையினர் அச்சத்தில் உறைந்து உயிருக்குப் போராடி தத்தளித்துக் கொண்டிருந்த அந்த நபரை லாவகமாக மீட்டனர்.


Advertisement