இந்தியா

விமானத்தில் இருந்து தவறி விழுந்த பணிப்பெண்! மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஏர் இந்தியா!

Summary:

விமானத்தில் இருந்து தவறி விழுந்த பணிப்பெண்! மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஏர் இந்தியா!

மும்பையில் விமானத்தில் இருந்து தவறி விழுந்த பணிப்பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான AI 864 விமானம் 53 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது.

அப்போது விமானத்தின் கதவை மூடுவதற்காக 53 வயதான பணிப்பெண் சென்றுள்ளார். அப்போது விமானத்தில் இருந்து திடீரென தவறி விழுந்த அவர், படுகாயங்களுடன் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார்.

        

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் திருச்சியிலிருந்து துபாய் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கட்டுப்பாட்டு டவர் மீது மோதி நிலை தடுமாறியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பிறகு மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு 130 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தொடர்ந்து ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்குவதால் பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 


Advertisement