பள்ளியின் நான்காவது மாடியில் அமைதியாக நடந்து சென்ற 10 ஆம் வகுப்பு மாணவி! நொடியில் வந்து கூப்பிட்ட எமன்! திடீரென மாணவி செய்த அதிர்ச்சி செயல்! பதறவைக்கும் சிசிடிவி காட்சி...



ahmedabad-school-girl-suicide

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்தின் நவரங்புரா பகுதியில் செயல்பட்டு வரும் சோம் லலித் பள்ளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இப்பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவியாக கல்வி பயிலும் ஒருவர், நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்திருந்தார். இடைவேளையின் போது, பள்ளி கட்டிடத்தின் நான்காவது மாடியில் சாவியை சுழற்றியபடி அமைதியாக நடந்து சென்ற அவர், திடீரென யாரும் எதிர்பாராதவிதமாக கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவத்தை பார்த்த சக மாணவிகள் அலறி ஓடியும், அவரை காப்பாற்ற முடியவில்லை. உடனடியாக தகவல் பெற்ற ஆசிரியர்கள், பலத்த காயங்களுடன் மாணவியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: சண்டையில் கோபமடைந்து கணவன் மீது கொதிக்க கொதிக்க அதையெல்லாம் உடம்பில் ஊற்றிய மனைவி! இரவு முழுவதும் அறையில் பூட்டி வைத்து… கொடூர சம்பவம்!

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். தலை, கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த துயர சம்பவம், பள்ளி வளாகத்திலும், மாணவிகளிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை பெற்ற போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகளில் மாணவி தற்கொலைக்கான எந்தவித உள்நோக்கமும் காட்டவில்லை என்பதால், மனநல பிரச்சனைகள் காரணமாகவே இச்சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மாணவி தற்கொலை செய்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: தலைக்கேறிய போதை! சொகுசு காரில் தறிகெட்டு 100 கிமீ வேகத்தில் வந்த நபர்! ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான 3 பேர்! பகீர் வீடியோ காட்சி..